கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தை இணைத்துக்கொள்ள வேண்டியது அவசியமே, ஆனால் தீர்மானம் எடுக்கும் சக்தியாக வைத்திய அதிகாரிகளே இருக்க வேண்டும். அவர்களை கொண்டே நிலைமைகளை கையாள வேண்டுமென ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
எந்தவித அடிப்படையும் இல்லாது அரசாங்கம் அமைச்சரவையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைரஸ் தொற்று (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்திகைத் தெரிவித்துள்ளா்.
தொடர்ந்து் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்தியர்களின் பங்களிப்பு குறைவாகவே கிடைக்கின்றது.
ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டும் மக்களுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளில் ஆயுர்வேத மூலிகைகளை வளர்க்க வேண்டும். தேசிய ஒற்றுமையை இந்த விடயத்தில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இன்று நாட்டில் மக்கள் உயிரிழக்கின்றனர்.
அவர்களை பார்த்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது. உடனடியாக இந்த நிலைமைகளை தடுக்க வேண்டும். ஏனைய அனர்த்தங்களில் சகலரும் ஒன்றிணைய முடியும் ஆனால் இதில் அவ்வாறு ஒன்றிணைய முடியாது.
ஆகவே மக்களை தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் நாடகங்கள், விளையாட்டுக்களை மட்டுமே காட்டிக்கொண்டு இருக்காது மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..