06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ஒரே ஒருவருக்கு கொரோனா- நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது நியூசிலாந்து

நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய‌ தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டு அதனை கட்டுக்குள் கொண்டுவந்த சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. வெறும் 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம், வைரஸ் பரவலை வெகு விரைவாக கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், நியூசிலாந்தில் இதுவரை கொரோனாவுக்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 6 மாதங்களாக அங்கு புதிய கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது, நியூசிலாந்தின் வடக்கு‌ பகுதியில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் எந்தவித வெளிநாட்டு தொடர்பும் இல்லாத ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய‌ தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஆக்லாந்து நகரிலும், பாதிக்கப்பட்ட அந்த நபர் அண்மையில் சென்று வந்த கோரமண்டல் நகரிலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.‌

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஒரே ஒருவருக்கு கொரோனா- நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது நியூசிலாந்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு