23,May 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கம்பஹா மாவட்டத்தில் இன்று விசேட தடுப்பூசி திட்டம்

கம்பஹா மாவட்டத்தில் இன்று (23) திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் விஷேட வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 25,000 பேர் இன்னும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை. இதனை கருத்திற்கொண்டு இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்ப்படுகிறது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட கொவிட் வைரசு தொற்று பரவலை தடுக்கும் குழுவின் கலந்துரையாடலின் போது இதுதொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது

21 ஆம் திகதியன்று Zoom தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்கும் தலா மூன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள 15 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 45 தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு வருகை தர முடியாதவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொலிஸ் ஊடாக வாகன வசதிகள் வழங்கப்படும்.

தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு எவ்விதத்திலும் வருகை தர முடியாதவர்களுக்கு வீடுகளில் வைத்தே தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன் போது ஆலோசனை வழங்கினார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கம்பஹா மாவட்டத்தில் இன்று விசேட தடுப்பூசி திட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு