19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

கண்டி எசல பெரஹராவின் தீர்தோற்சவம் இன்று

இன்று இடம்பெறும் கண்டி எசல பெரஹராவின் தீர்தோற்சவத்தையடுத்து பெறஹரா நிறைவு பெறும் என்று ஸ்ரீ தலதா மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது. .

இன்று (23) மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும் வைபவத்தில் பெரஹராவில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இந்நிகழ்வின் போது சிறந்த முறையில் பெரஹரா நிறைவடைந்த தகவல் அடங்கிய பேழையை ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே ஜனாதிபதியிடம் கையளிப்பார். அத்துடன் பெறஹரா நிறைவுபெறும்.

கண்டி எசல பெரஹரா இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மத வழிபாடுகளுடன் பார்வையாளர்கள் இன்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்றது. .

தலதா மாளிகை மற்றும் நான்கு தேவாலயங்களின் எசல பெரஹரா கடந்த 8ம் திகதி ஆரம்பமானது. 12ம் திகதி வரை 5 தினங்கள் ; பெரஹரா உள் வீதி வலம் வந்தது. 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை கும்பல் பெரஹரா இடம்பெற்றது. 18ம் திகதி முதல் 22ம் திகதி வரை விசேட ரந்தோலி பெரஹரா இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த மதத்தவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படுகின்ற ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா இதுவாகும். புத்த பெருமானின் புனித தந்தம் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது உலகிலேயே புனிதமான வணக்கத் தலமாகப் போற்றப்படுகின்றது.

1592 தொடக்கம் 1815 வரை கண்டி இராச்சியம் நிலவிய காலத்தில் கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆட்சி வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளபடியால், வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகை மிக முக்கிய தலமாக போற்றப்படுகிறது.எசல பெரஹெர என்பது ஆடி மாதத்தில் இடம்பெறுகின்ற வைபவமாகும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கண்டி எசல பெரஹராவின் தீர்தோற்சவம் இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு