நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். இவர் கைவசம் தற்போது எனிமி, துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன.
இதில் எனிமி படத்தை ஆனந்த் சங்கரும், வீரமே வாகை சூடும் படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணனும் இயக்கி உள்ளனர். மேலும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடிகர் விஷால் நடிப்பதோடு, இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார்.
நடிகர் விஷால் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார். மேலும் குழந்தைகளோடு கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..