04,Feb 2025 (Tue)
  
CH
சினிமா

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் நடிகர் ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆன்மீக குருக்களை அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி. அந்த வகையில் தற்போது வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் உடன் இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் நடிகர் ரஜினி சந்திப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு