04,Dec 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

முடக்க கட்டுப்பாட்டில் கொழும்பு மக்களின் மோசமான செயற்பாடு

இலங்கையில் கொவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

எனினும் முடக்க நிலையை மறந்த மத்திய கொழும்பு மக்கள் வீதிகள் நிறைந்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பலர் பொருட்கள் கொள்வனவு செய்து வருகின்ற நிலையில், வர்த்தகர்கள் விற்பனை நடவடிக்கைகளும் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் பரவும் கொவிட் தொற்றினை மறந்து முகக் கவசம் அணியாமல் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது மக்கள் வீதிகளில் நடமாடும் காட்சிகளை அவதானிக்க முடிந்துள்ளது.

கொழும்பில் டெல்டா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





முடக்க கட்டுப்பாட்டில் கொழும்பு மக்களின் மோசமான செயற்பாடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு