விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை யார் மறந்தாலும் நிச்சயம் தான் மறக்கவில்லை. யாரையும் மறக்க மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.
ஒடுக்கப்பட்ட சமுதாயம் எதுவாக இருந்தாலும் அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் கொள்கை. 1987-ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.4 கோடி செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதி இது. யார் மறந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை. யாரையும் மறக்க மாட்டேன்.
நான் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவன். மிகவும் பின் தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடம் உண்டு.
நான் முதல்- அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டு இருப்பதால் பின் தங்கிய வகுப்பினருக்காக என் உயிரையும் பணயமாக வைத்து போராடுவேன் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதல்- அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் சொன்ன வாசகம் இது. அந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..