23,Nov 2024 (Sat)
  
CH
உலக செய்தி

அமெரிக்க தடுப்பூசியை செலுத்தும் பணியை அதிரடியாக நிறுத்தியது ஜப்பான்

ஜப்பானில் அமெரிக்காவின் மற்றொரு தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த மே மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளைபோல ஜப்பானிலும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்திய பிறகு அங்கு பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

ஜப்பான் இதுவரை கொரோனா தடுப்பூசி மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பூசி போடுவதையும் ஊக்கப்படுத்தாமல் இருந்தது.

பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து வெளிநாட்டு தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் பைசர், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா ஆகிய மருந்துகளை பயன்படுத்த ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தன. அமெரிக்காவின் மற்றொரு தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த மே மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

இவற்றை பொதுமக்களுக்கு போடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. அதில் ஒரு மருந்து பாட்டிலுக்குள் கருப்பு துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 5 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசி மருந்தை நிறுத்தி வைத்து உள்ளது. ஏற்கனவே இந்த மருந்தில் கலப்படம் இருப்பதாக புகார்கள் வந்தன. அதுபற்றி ஆய்வு நடத்தப்படுகிறது.

ஆனால் மாடர்னா தடுப்பூசி போட்ட யாருக்கும் இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்த கருப்பு துகள்கள் எப்படி வந்தன? என்பது தெரியவில்லை. அமெரிக்கா இந்த மருந்தை உற்பத்தி செய்தாலும் ஸ்பெயினில் உள்ள ஒரு நிறுவனம்தான் மருந்தை பாட்டிலில் அடைத்து சப்ளை செய்யும் பணியை செய்கிறது.

ஒருவேளை அங்கு நடந்த தவறால் மருந்தில் கருப்பு துகள்கள் கலந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபற்றி சோதனை நடந்து வருகிறது.


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





அமெரிக்க தடுப்பூசியை செலுத்தும் பணியை அதிரடியாக நிறுத்தியது ஜப்பான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு