29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

வேட்பாளர்களை களம் இறக்குகிறார் கமல்ஹாசன்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்க உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் காய்களை நகர்த்தி வருவதாக அந்த கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.

9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி இருக்கிறார். 9 மாவட்டங்களின் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஏற்கனவே 2 முறை ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 1,521 வேட்பாளர்கள் கமல் கட்சி சார்பில் களம் இறங்குகிறார்கள். தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் (கட்டமைப்பு) மவுரியா மேற்பார்வையில் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மாநில அளவிலான இந்த குழுவினர் மாவட்ட குழுக்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

ஊரகப் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி செல்வாக்கோடு செயல்படுபவர்களை வேட்பாளர்களாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் தேர்வில் ஒவ்வொரு குழுக்களிலும் உள்ள மாநில செயலாளர்களும், மண்டல செயலாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர் தேர்வு முடிவடைந்த உடன் அதுபற்றிய தகவல் மாநில தலைமைக்கு அனுப்பப்படுகிறது.

அதன் பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி அன்று கமல்ஹாசன் தொடங்கினார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது.

ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் தோல்வியையே தழுவி இருந்தது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்க உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் காய்களை நகர்த்தி வருவதாக அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி ஆகியவற்றை எதிர்த்து கமல்ஹாசனின் கட்சி எந்த அளவுக்கு வெற்றிகளை பெறப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வேட்பாளர்களை களம் இறக்குகிறார் கமல்ஹாசன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு