15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அந்த வகையில் கடந்த 12ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதன்படி, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாமில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாத சூழலில் இன்றைக்கு முகாம் நடைபெறுகிறது என தமிழக அரசு முன்பே அறிவித்து இருந்தது.

கடந்த முறை 28 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் தடுப்பூசிகளை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம். கடந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் அனைவரும் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் தொடங்கியது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு