15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

தமிழ் அரசியல் கைதிகளிடம் முறைதவறி நடந்த லொஹான்! குற்றப்புலனாய்வத் துறையினரிடம் வாக்குமூலம்

வெலிக்கடை மற்றும் அனுரதபுரம் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் குறித்து இரத்தின மற்றும் ஆபரண ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவங்களை நேரில் பார்த்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆதாரங்களை குற்றப் புலனாய்வுத்துறையினர் சேகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வெளிநாட்டு பயணத்திலிருந்து நாடு திரும்பியதும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

இந்தநிலையில் இரத்தின மற்றும் ஆபரண ராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த தொடர்வது தொடர்பில், ஆளும் கூட்டணியின் மற்ற அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, அரசாங்கம் முழு பொலிஸ் அறிக்கைக்காக காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.







தமிழ் அரசியல் கைதிகளிடம் முறைதவறி நடந்த லொஹான்! குற்றப்புலனாய்வத் துறையினரிடம் வாக்குமூலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு