09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

அணுவாயுத ஒப்பந்தத்தை ரத்துச்செய்ய முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்

ஈரானுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள அணுவாயுத ஒப்பந்தத்தை ரத்துச்செய்ய முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


ஈரான் – அமெரிக்கா இடையில் தொடர்ந்தும் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா, ஈரானை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


ஈரான் உடன் அமெரிக்கா செய்திருந்த அணுவாயுத ஒப்பந்தத்தை கடந்த 2018ஆம் ஆண்டு நீக்கிய ட்ரம்ப், ஈரான் மீது இரண்டிற்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை டிரம்ப் விதித்தார்.


ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஈரானுடன் செய்திருக்கும் அணுவாயுத ஒப்பந்தத்தை ரத்துச்செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.


எனினும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


ஐக்கிய ஒன்றியத்தின் குறித்த அறிவிப்புக் காரணமாக அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




அணுவாயுத ஒப்பந்தத்தை ரத்துச்செய்ய முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு