29,Mar 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இருதய நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் கல்யாணராமன் கூறியதாவது:-

இருதய நோய் (மாரடைப்பு) உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், காற்று மாசு ஆகியவற்றால் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. இருதய நோயுடன் வாழும் 520 மில்லியன் மக்களுக்கு கோவிட்-19 கடுமையான இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது..

இதனால் இருதய நோய் உள்ளவர்கள் வழக்கமான இருதய பரிசோதனை செய்துகொள்ளாமல் அச்சப்பட்டு வீட்டில் தனிமையாக இருக்கின்றனர். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் நாம் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்.

புகை பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த செயலாகும். புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது.

மேலும் 15 ஆண்டுகளுக்கு மேல் புகை பிடிக்காதவர்களுக்கு இருதய நோய் வராது. புகைபிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டுமின்றி, அருகில் இருக்கும் சக மனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழிவகை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு