15,Jan 2025 (Wed)
  
CH
சமையல்

கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும் நிலையைத் தடுக்க அடிக்கடி உபயோகிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிவப்பு ராஜ்மா - ஒரு கப்

 பெருங்காயத்தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - 2

செய்முறை :

ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து அதில் அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுவையான சத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு