29,Mar 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

ஜப்பான் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பு

கொழும்பு துறைமுகத்தை நேற்று (02) வந்தடைந்த ஜப்பான் தற்பாதுகாப்பு சமுத்திர படையணி கப்பல்களை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

MURASAME, KAGA மற்றும் FUYUZUKI ஆகிய மூன்று பாரிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

கப்பல்களின் வருகை தொடர்பாக என ஜப்பானிய தூதரகம் தெரிவிக்கையில் ,இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என்று குறிப்பிட்டுள்ளது.

220 கப்பல் பணியாளர்களுடன் வருகை தந்துள்ள 151 மீட்டர் நீளம் கொண்ட FUYUZUKI கப்பல் இன்று (03) நாட்டில் இருந்து செல்லவுள்ளது.

பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இருதரப்பு பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, அவுஸ்திரேலியாவில் இருந்து MURASAME மற்றும் KAGA ஆகிய போர்க்கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன.

இந்த கப்பல்கள் ‘JA- LAN EX’ எனப்படும் இலங்கை கடற்படையுடன் இணைந்த கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்த இரண்டு கப்பல்களும் நாளை செல்லவுள்ளன.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஜப்பான் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு