குற்றங்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கான சிரேஷ்ட காவல்துறை அதிபர் அஜித் ரோஹண, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் (நாடா) உறுப்பினராக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் ரோஹன, சிரேஷ்ட காவல்துறை அதிபராக பதவியை வகிக்கும் காலம் வரை, இந்த உறுப்பினர் நிலை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டின் புகையிலை மற்றும் மதுசார சட்டம் எண் 27 இல் தேசிய ஆணையத்தின் விதிகளின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..