16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இந்தியாவிடம் அரச தலைவர் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை

காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகளை தான் நன்கு புரிந்துகொண்டுள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa), இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிற்கு (Sarsha Vardhan Shringla) விளக்கமளித்துள்ளார்.


இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பெனவும் அரச தலைவர்

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் அரச தலைவரது அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.


காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அரச தலைவர், யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றியபோது, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் தாம் விடுத்த பகிரங்க அழைப்பு தொடர்பிலும் அவர் எடுத்துரைத்துள்ளார்.


அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்து செயற்படுவதன் தேவை குறித்து அரச தலைவர் கோட்டாப ராஜபக்ச, இந்திய வெளிவிவகார செயலாளரிடம் எடுத்துரைத்துள்ளார்.


இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினதும் மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமெனவும், நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் எனவும் அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.







இந்தியாவிடம் அரச தலைவர் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு