23,Nov 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

பவுர்ணமி அன்று சொல்ல வேண்டிய ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்

இந்த அஷ்டகத்தை பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.

சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.


பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.

தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்

தளர்வுகள் தீர்ந்து விடும்

மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்

மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்

சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே

தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)


வாழ்வினில் வளந்தர வையகம்

நடந்தான் வாரியே வழங்கிடுவான்

தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட

தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்

கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்

தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)


முழுநில வதனில் முறையொடு

பூஜைகள் முடித்திட அருளிடுவான்

உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்

உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்

தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்

தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)


நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்

நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்

சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்

நிறைத்திடுவான் வான்மழை எனவே

வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்

தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)


பூதங்கள் யாவும் தனக்குள்ளே

வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்

ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்

பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்

மாயம் யாவையும் போக்கிடுவான்

தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)


பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்

பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்

தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்

நிழல்தரும் கற்பகம் நினைத்திட

பொழிந்திடும் நின்மலன் நானென்பான்

தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)


சதுர்முகன் ஆணவத் தலையினைக்

கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்

பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்

செய்யென்றான் பதரினைக் குவித்து

செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்

தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)


ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்

செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்

ஜெயங்களைத் தந்திடுவாய்

ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா

செல்வங்கள் தந்திடுவாய்

தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8) 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





பவுர்ணமி அன்று சொல்ல வேண்டிய ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு