அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கலங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியது சமூக ஆர்வலர்களின் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாக்கியது.
இந்நிலையில், அந்த புகைப்படத்தில் போத்தலுடன் காட்சியளித்த சிவாந்தம் தற்போது இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் நண்பர் அளித்த பரிசு எனவும், தமிழினத்தின் மீதும், தமிழீழத் தேசியச் சின்னங்களின் மீதும், அளப்பரிய பற்று கொண்டதின் பேரிலேயே இப்புகைப்படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இச்செயல் குறித்து என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்றும் குடும்பத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை எனவும் இது முற்றிலும் என் தவறு மட்டுமே எனவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் போல இனி எக்காலத்திலும் இடம் பெறாது என மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..