தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ- நாளைய தினம் சில அவசர எடுக்க ஒன்று கூடுகிறது. வவுனியாவில் நடக்கும் கூட்டங்களில் நாடாளமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளது.
ரெலோவின் அரசியல் குழு. தலைமைக்குழு ஆகியன நாளை கூடுகின்றன.
வேட்பாளர் தெரிவு நாளை இடம்பெறமென கூறப்பட்டுள்ள போதும், பல மாவட்டங்களில் வேட்பாளர்கள் தீர்மானிக்கப்பட்ட விட்டனர்.
யாழ் மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் களமிறங்கவுள்ளார். இது கட்சியின் சில மட்டத்தில் அதிருத்தியார்களை உருவாக்கியுள்ளது, யாழ் மாவட்டத்திலிந்த பிரிந்த சென்ற ரெலோ அதிருப்தியார்கள் தமது அணிக்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்து விட்டனர். ஏனினும் ரெலேவிற்குள் அப்படியான ஏற்பாடுகள் இல்லை.
இதேவேளை ரெலோவின் அம்பாறை மாட்ட கூட்டம் அம்பாறையில் நடந்தது. இதில் கோடீஸ்வரண் கலந்த கொள்ளவில்ல.அவர் பதவிவிலக வேண்டுமென அனைத்த உறுப்பினர்களும் வலியறுத்தியுள்ளனர். கட்சியின் முடிவுகளிற்கு கட்டுப்புடாமல் அவர் செயற்டுவதாக மகள் குற்றம் சாட்டியுள்ளனர்
0 Comments
No Comments Here ..