23,May 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

அவன் கார்ட் வழக்கு- ஐவர் விடுதலை

அவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸங்க யாபா சேனாதிபதிக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தம்மிக கனேபொல, ஆதித்ய படபெந்திகே மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதிவாதி சேனாதிபதி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல அவருக்கு தடை விதித்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.


அவரின் வெளிநாட்டு கடவுச் சீட்டினை நீதிமன்றிற்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அதேபோல், குறித்த வழங்கின் பிரதிவாதிகள் 5 பேரை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ரத்னா லங்கா நிறுவனம், அவன் கார்ட் மெரிடைம் சர்விஸ், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பியாசிறி பெர்னாண்டோ, மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா அதிகாரி எகொடவெல, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.


சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்தமை உட்பட 7573 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு விஷேட நீதிமன்றத்தில் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




அவன் கார்ட் வழக்கு- ஐவர் விடுதலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு