20,Apr 2024 (Sat)
  
CH
விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி

அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர்களான டேரில் மிட்செல் 11 ரன்னிலும், மார்ட்டின் குப்தில் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். மறுமுனையில் பிலிப்ஸ் நிதானமாக ஆடினார்.

அணியின் ஸ்கோர் 144 ஆக இருந்தபோது, பிலிப்ஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஜேம்ஸ் நீஷம் 13 ரன்கள் , டிம் செய்பர்ட் 8 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு