அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் இன்னும் பயன்படுத்தப்பட வேண்டிய எஞ்சிய இரசாயன உரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நுவரெலியா, பதுளை மற்றும் பண்டாரவளை புறநகர் பகுதிகளில் உள்ள மரக்கறி மற்றும் பழ விவசாயிகளின் பண்ணைகளில் பயன்படுத்தப்பட்ட கரிம உரங்கள் கழுவிச் செல்லப்பட்டமை விவசாய அமைச்சுக்கு தெரியவந்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும்(Mahindananda Aluthgamage) இந்த நிலையை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஆங்கில் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. "அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் காய்கறி விலை கடுமையாக உயரும்" என விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
உர இறக்குமதி நிறுவனங்களுக்கு சொந்தமான இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் குறித்த அறிக்கையை தயாரிக்கவும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
0 Comments
No Comments Here ..