இலங்கையில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,328 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்று உறுதியான மேலும் 745 பேர் இன்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 563,265 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..