22,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் கெஹெலிய ரம்புக்வெல

முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையிலான கால பகுதியில் வெகுசன ஊடக அமைச்சராக கடமையாற்றிய கெஹெலிய ரம்புக்வெல பயன்படுத்திய தொலைபேசியின் கட்டணமான 2 லட்சத்து 30,684 ரூபாவினை அரச அச்சக கூட்டுத்தாபத்தினூடாக செலுத்தியதை தொடர்ந்து அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கினை தாக்கல் செய்திருந்தது.


எனினும் வழக்கினை தாக்கல் செய்யும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆணையாளர்கள் மூவரின் எழுத்து மூல அனுமதி பெறவில்லை என்பதனால் விசாரணைக்குட்படுத்த முடியாது என தெரிவித்து பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் எதிர்ப்பினை முன்வைத்திருந்தனர்.


இதற்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முறையானது இலஞ்ச ஊழல் சட்டத்திற்கு முரணானது என நீதவான் அறிவித்துள்ளதோடு வழக்கிலிருந்தும் விடுதலை செய்துள்ளார்.




வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் கெஹெலிய ரம்புக்வெல

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு