15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

ராஜபக்சர்களிடையே வெடித்தது சமர் - வெளிவந்த தகவல்

அரசாங்கத்திலிருந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை ஓரம் கட்டும் முயற்சியாக சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுசுப்பதவி பறிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,

இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்த மகிந்தவின் தீவிர விசுவாசி ஆவார். அமைச்சரவையின் கூட்டுத் தலைமையை அரச தலைவரும், பிரதமரும் வகிக்கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையைப் பெறாமலேயே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் அவரின் சகாக்களும் சுயமாக முடிவெடுத்து சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவியைப் பறித்தெடுத்துள்ளனர்.

இது இந்த அரசின் வீழ்ச்சிக்கான ஆரம்பமாகும். ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே அதிகாரச் சமர் மூண்டுள்ளது. எனவே, ராஜபக்ச குடும்ப அரசு விரைவில் கவிழும் என்பது திண்ணம் என்றும் தெரிவித்துள்ளார்.





ராஜபக்சர்களிடையே வெடித்தது சமர் - வெளிவந்த தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு