22,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு ஆலோசனை

டொலர் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிப்பதற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவால் (Bandula Gunawardane) மத்திய வங்கிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறக்குமதியாளர்களின் பொருட்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையும், மத்திய வங்கிக்கு இன்று கையளிக்கப்பட்டது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இறக்குமதியாளர்களுக்கு அவசியமான டொலரை, நாளை விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  





அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு ஆலோசனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு