13,Nov 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

அரசாங்கத்தை பொறுப்பேற்க நாம் தயார் - நளின் பண்டார

அரசாங்கத்தை நாளைய தினமே பொறுப்பேற்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 29 ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாய பிரகடனம் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விவசாயத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு விவசாயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை உள்ளடக்கி இந்த பிரகடனம் வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான குழுவினர் இன்னும் சீனாவில் இருந்து சேதனப்பசளைகளை கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அது கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லையெனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் விவசாயிகள் அடைந்துள்ள நட்டத்தை ஈடு செய்வதற்கு அரசாங்கம் 40 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வது போதுமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு நட்டஈடு வழங்கும் போது, எங்கிருந்து பணத்தை வழங்குவது, பணத்தை அச்சிட்டே வழங்கவேண்டுமெனவும், அவ்வாறு அச்சிட்டு வழங்கினால், அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்து மீண்டும் விவசாயிகளை பாதிக்கப்படுவார்கள் எனவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்தை பொறுப்பேற்க நாம் தயார் - நளின் பண்டார

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு