29,Mar 2024 (Fri)
  
CH
சினிமா

தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரபலம்

விரிசையாக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் தனுஷின் படத்தில் இருந்து சினிமா முன்னணி பிரபலம் விலகியுள்ளதாக அறிவித்திருக்கிறார் இது ரசிகர்களின் மத்தியில் இருந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் வரிசையாக அவர் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. 

அதன் பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடித்துவருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தொடங்கிய ’வாத்தி’ படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் 'வாத்தி' படத்தில் இருந்து விலகியுள்ளார். இத்தகவலை ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தபதிவில், “தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தில் பணிபுரிய முடியாமல் போனது துரதிர்ஷ்டம். விரைவில் வேறொரு படத்தில் பணிபுரிய காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரபலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு