20,Apr 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

துன்பங்களை போக்கும் தை மாத தேய்பிறை ஏகாதசி

ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.

பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். நம்மில் நிறைய பக்தர்கள், மாத ஏகாதசியில், மாதம் தவறாமல் விரதம் மேற்கொண்டு, பெருமாளை சேவிப்பவர்கள் இருக்கிறார்கள்.

ஏகாதசி நாளில், விரதம் இருந்து, ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மகாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்!

அந்த வகையில், தை மாத ஏகாதசி ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. நாளைய தினம், 28.1.22 வெள்ளிக் கிழமை சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.

முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்குங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் உங்களுக்குப் பிடித்தமான உறவுக்காரர்கள் நண்பர்கள் என யார் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் என உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.

புளியோதரை அல்லது தயிர்சாதம் வழங்குங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் சீரும் சிறப்புமாக, செம்மையுடன் வாழ்வீர்கள்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




துன்பங்களை போக்கும் தை மாத தேய்பிறை ஏகாதசி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு