20,Apr 2024 (Sat)
  
CH
தொழில்நுட்பம்

வைபை (WiFi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

புளூடூத் – வை-ஃபை இவை இரண்டுமே கம்பியில்லா கணினி வலையமைப்புக்கான (wireless network) தொழில் நுட்பங்களே

இவை கம்பிகளுக்குப் பதிலாக வான் அலைகளை (Radio Frequency) மூலம் வலையமைப்பை உருவாக்குகின்றன.

இவையிரண்டும் 2.4 Ghz அலைவரிசையில் செயல்பட்டாலும் அவை பயன்படுத்தப்படும் விதத்தில் மாறுபட்டு நிற்கின்றன.

வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கம்பியில்லா அதிவேக இணைய இணைப்பைப் பெறுவதே வை-ஃபை தொழில் நுட்பத்தின் பிரதான நோக்கம்

எனினும் புளூடூத் தொழில் நுட்பத்தின் பிரதான பயன்பாடு ஒரு தனி நபர் சார்ந்த வலயமைப்பை உருவாக்குவதாகும்.

அதாவது ஒரு தனி நபருடைய கணினியோடு கையடக்கத் தொலைபேசி ப்ரிண்டர், கேமரா போன்ற சாதனங்களைக் குறுகிய ஒரு வீச்சினுள் வயரின்றி இணைத்து அவற்றிற்கிடையே டேட்டாவைப் பரிமாறிக் கொளவதாகும்.

இவ்வாறான இணைப்பை Personal Area Network (PAN) என அழைக்கப்படும்.

மேலும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள், மவுஸ், கீபோர்டுகள் மற்றும் கேம் கன்ட்ரோலர்கள் போன்ற வயர்லெஸ் சாதனங்களை வயரின்றி கணினியுடன் இணைக்க புளூடூத் ஏற்றது

புளூடூத் வசதி கொண்ட ஹெட்செட்டைப் (hands free) பொருத்துவதன் மூலம் வாகனமொன்றைச் செலுத்தியவாறோ அல்லது தங்கள் வேலையில் எந்த இடையூறுமில்லாமலே செல்ஃபோன் அழைப்புக்குச் செவி மடுக்க முடிகிறது.

அது மட்டுமல்லாமல் புளூடூத் மூலம் ஒரு செல்போனைக் கணினியில் இணைத்துப் ஃபைல் பரிமாற்றம் செய்தல், மற்றும் செல்போனிலிருந்து இணையத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற வசதிகளையும் பெறலாம்.

புளூடூத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்போது முதலில் அந்தச் சாதனங்களை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். இதனைப் pairing என்ப்படும்.

அவ்வாறு இரண்டு சாதனங்களைப் பெயார் (pair) செய்யும்போது அவற்றில் ஒரு சாதனம் மற்றைய புளூடூத் வசதி கொண்ட சாதனத்தைத் தேடிக் கண்டறிய வேண்டும்.

குறிப்பிட்ட வீச்சினுள் தேடிக் கண்டறிந்ததும். அடுத்த புளூடூத் சாதனத்தை அதன் திரையில் காண்பிக்கும்.

அவ்வாறு கண்டறியும் சாதனத்துடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு பாஸ்கீ (passkey) எனும் ஒருஇரகசிய இலக்கத்தை வழங்க வேண்டும்.

இரண்டு சாதனத்திலும் ஒரே பாஸ்கீ (passkey) வழங்கி அது ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் இரண்டு சாதனங்களும் தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.

தற்போது மடிக் கணினிகள் வை-ஃபை மற்றும் புளூடூத் இணைப்புக்கான வசதியுடனேயே தயாரிக்கப்படுகின்றன.

உங்கள் கணினியில் புளூடூத் / வை-ஃபை வசதி இல்லை எனின் வை-ஃபை அடெப்டர் போன்று புளூடூத் எடப்டரைப் வெளிப்புறமாகப் பொருத்திக் கொள்ள முடியும்.

வை-ஃபை இணைப்பில் பொதுவாகக் கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் இணைக்கப்படுகின்றன.

அதிவேக இணைய இணைப்பு தவிர வை-ஃபை மூலம் ஃபைல், ப்ரோக்ரம் போன்ற மென்பொருள்களையும் ப்ரிண்டர், ஸ்கேனர் போன்ற வன்பொருள்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

வை-ஃபையை விடவும் புளூடூத் தொழில் நுட்பம் பயன் படுத்துவது எளிமையானது,

ஏனெனில் வை-ஃபை தொழில் நுடபத்தைச் செயற்படுத்த ரூட்டர் (ரவுட்டர்) , மோடெம் போன்ற சாதங்னங்களை நிறுவுதல் அவற்றில் செட்டிங் மாற்றியமைத்தல் போன்ற பல செயற்பாடுகள் உள்ளன.

அவ்வாறே மற்றுமொரு கணினியிலிருந்து ஃபைல்களைப் பரிமாறிக் கொள்ளும்போதும் சில செட்டிங் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. புளூடூத்தில் இது போன்ற சிரமங்கள் இல்லை.

– புளூடூத் தொழில் நுட்பம் 30 முதல் 100 அடிகள் வரையிலான மிகவும் குறுகிய வீச்சினுள்ளேயே டேட்டாவைக் கடத்துகிறது. எனினும் வை-ஃபை சிக்னல் அதனைவிட அதிகமாக 800 அடிகள் அல்லது அதற்கு மேலும் செல்லத்தக்கது.

– ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் மற்றும் மடிக் கணினிகளை வை-ஃபை மூலம் இணைத்து ஒரு கம்பியில்லா உள்ளக வலையமைப்பை Local Area Network (LAN) உருவாக்கி விடலாம்.

எனினும் புளூடூத் கொண்டு ஒரு உள்ளக வலையமைப்பை உருவாக்க முடியாது. இதன் மூலம் தனி நபர் கணினி வலயமைப்பே உருவாக்கப்படுகிறது.

– வை-ஃபை இணைப்பில் 802.11ac எனும் பதிப்பில் டேட்டா பரிமாறும் வேகமானது 250 Mbps அளவில் செயல்படுகிறது. எனினும் புளூடூத் இணைப்பின் பதிப்பு 4.0 இல் வேகமானது 25 Mbps அளவிலேயே செயல்படுகிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





வைபை (WiFi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு