நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கவுள்ள நிலையில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படம் சம்மந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் பரவிவருகிறது.
நடிகர் அக்ஷய குமார் இதற்கு முன்பு கேசரி, ரவுடி ராத்தோர், லட்சுமி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..