24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு இலங்கை அரசு முயற்சி!

தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இதனை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இக் காலத்தில் தமிழ் மக்கள் தமது நலன்சார் வலுவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். அரசு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வேறு பல திணைக்களகங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிழக்குமாகணத்தில் தனது வேலைத்திட்டத்தை தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது. இதனுடாக தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை இல்லாது செய்ய முனைகின்றது.

மறுபுறத்தில் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்காமல் தாமதப்படுத்துவதனுடாக அவ்விருதரப்பினர்களுக்குமிடையில் முரண்பாட்டை உருவாக்கின்றது.





தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு இலங்கை அரசு முயற்சி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு