உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumit Wijesinghe) தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டிய புதிய விலைகளைக் குறிப்பிட்டு மீண்டும் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
லங்கா ஐஓசி அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.
அண்மையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் என பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாலும், அதன் காரணமாக இனி பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama)தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பாவனையை குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும் ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..