இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்த முயன்ற 8 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே இலங்கை உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
கடல் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய, இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடற்கரை பகுதியில் கடலோர காவல் குழும பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் தீவிர குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று முன் தினம் காலை ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர்.
அப்போது ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தனியார் நட்சத்திர விடுதிக்கு பின்புறம் ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்ட தீவிர குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் அவர்களிடம் விசாரணை செய்ய அவர்கள் அருகே சென்ற போது பொலிஸ் வருவதை அறிந்து அவர்கள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
தீவிர குற்றப்பிரிவு பொலிஸார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து பவுடர் பாக்கெட் ஒன்று கைப்பற்றப்பட்டது.
0 Comments
No Comments Here ..