சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில், இன்று அதன் நிறைவேற்றுக் குழு ஆராயவுள்ளது.
இருப்பினும் சுகாதார அமைச்சு இறுதியாக தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து எழுத்து மூல ஆவணத்தை தம்மிடம் கையளிக்க வேண்டும் என அதன் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அந்த ஆவணம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை உள்ளிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் இருந்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..