வவுனியா சிங்கள பிரதேச செயலக வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த வீட்டில் நேற்றைய தினம் இரவு சமையல் செய்த பின் சமையலறை கதவினை மூடிவிட்டு தூங்கச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் இன்று அதிகாலை தேநீர் தயாரிப்பதற்காக சமையல் அறையை திறந்த போது சமையல் எரிவாயு அடுப்பு வெடித்திருப்பதை பார்த்து வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..