21,Nov 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

அபுதாபியில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறும் கமலஹாசன்.!

வருகின்ற 26, 27-ந் திகதிகளில் சர்வதேச இந்திய திரைப்பட விழா அபுதாபியில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.


கமல்ஹாசன் தனது 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. 6 படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் இளைஞராக நடித்தார். 

கன்னியாகுமரி என்னும் மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது 25-வது படமான அபூர்வராகங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது பெற்றார். மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்திய தேசிய விருது கிடைத்தது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த நாயகன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த இந்தியன் ஆகிய படங்களுக்கு 2-வது, 3-வது முறையாக இந்திய தேசிய விருது கிடைத்தது.


இந்நிலையில் கமல்ஹாசனின் திரைப்பட சாதனைகளை பாராட்டி அபுதாபியில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் நிதேஷ் தேஷ்முக் ஆகியோருக்கு பிராந்திய படங்களின் சாதனையாளர்கள் என்ற விருது வழங்கப்படுகிறது.






அபுதாபியில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறும் கமலஹாசன்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு