18,Dec 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினத்திற்கு சோனியா, ராகுல் அஞ்சலி.!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்திற்கு டெல்லியில் அவரது நினைவிடத்தில் கொங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி , தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்தார்.


இந்த நிலையில் இன்று அவரது 32-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வீர் பூமியில் இருக்கும் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


தனது தந்தை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘அப்பா, நீங்கள் என்னோடும், என்னுடைய நினைவுகளிலும் என்றென்றும் எனக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார்,




முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினத்திற்கு சோனியா, ராகுல் அஞ்சலி.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு