ஐ.தே.கவின் தலைமையை முடிவு செய்ய கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பை நடத்த ரணில் விக்கிரமசிங்க தீரமானித்துள்ளார்.
கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்பின் போது, ரணில் இதனை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, செயற்குழுவில் பெரும்பான்மையை பெறும் விதமாக, செயற்குழுவின் புதிய உறுப்பினர்களாக தனது ஆதரவாளர்களை ரணில் பரிந்துரைத்துள்ளார். செயற்குழுவிற்கு கரு, சஜித் ஆகியோரும் உறுப்பினர்களை பரிந்துரைத்துள்ள போதிலும், ரணில் ஆதரவாளர்களே செயற்குழுவில் அதிகமுள்ளமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..