20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

காவற்துறை அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்

கைது செய்யப்படும் அனைவரையும் சமமாக நடத்துமாறும் எந்தவித அழுத்தங்களுக்கும் கீழ்படியாது செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் காவற்துறை அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லாது வெளி நோக்கங்களுக்காக எவரும் கைது செய்யப்படக்கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

எவரேனும் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கை இடம்பெற வேண்டியது குறித்த பொறுப்பை நிறைவேற்றும் அதிகாரியின் தொழில்சார் தீர்ப்பின் அடிப்படையிலாகும்.

 

அந்த சுயாதீனமாகவும் எந்த பயமுறுத்தல் அல்லது அனுசரணைகளுமின்றி இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுமாறு பதில் காவற்துறை மா அதிபருக்கு அறிவுறுத்துமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

 

கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், அது கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்திற்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும்.

 

இதனால் காவற்துறையினர் மிகுந்த கவனத்தோடும் சட்டதிட்டங்களை முழுமையாக பேணியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

 

தூரநோக்குடன் உரிய முறையில் கடமையை நிறைவேற்றுமாறும் தேவையான போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் செயற்படுமாறும் ஜனாதிபதியின் செயலாளரினால் பதில் காவற்துறைமா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.




காவற்துறை அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு