ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க விரைவில் தேர்தலொன்றிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார் எனினும் எந்த தேர்தல் என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.
அவர் எந்த தேர்தல் என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விசேட கலந்துரையாடல் ஒன்றிற்காக ஸ்ரீலங்காபொதுஜனபெரமுனவின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
இந்தசந்திப்பில் தேர்தல் ஒன்று குறித்து கருத்து வெளியிடப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் விரைவில் தேர்தலொன்று இடம்பெறும் என ரணில்விக்கிரமசிங்க சூசகமாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க தேர்தல் குறித்து எதனையும் விசேடமாக தெரிவிக்கவில்லை ஆனால் விரைவில் தேர்தலொன்று இடம்பெறலாம் என்பது அவரது பேச்சில் வெளிப்பட்டது என தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அது உள்ளுராட்சி சபை தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்பது குறித்து தெளிவாக அறிந்துகொள்ளமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..