1. மோதலின்போது அமெரிக்கா உள்ளிட்ட 100 நாடுகள் டிரோன்கள் பயன்படுத்தி வருகின்றன. 2. குறைந்த செலவு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியை இலக்கு வைத்து தாக்க முடியும் என்பதால் பயங்கரவாதிகள் கூட பயன்படுத்துகின்றனர்.
3. வணிகம் மற்றும் நுகர்வோர் வசதிக்காக பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்ல டிரோன் பயன்படுத்தப்படுகிறது.
2020-ல் இதன் எண்ணிக்கை 5 மில்லியனாக இருந்த நிலையில், 2025-க்குள் 7 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4. உலகளவில் 2021-ல் இருந்து 2022-ல் விற்பனை 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. 5. கடந்த சில வருடங்களாக டிரோன்களை வாங்குவது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அது மீறப்படுகின்றன.
6. ஒவ்வொரு நாடுகளும் எந்தவித அச்சமின்றி, எதிர் நாடுகள் கேள்வி கேட்கும் என்பது குறித்து கவலையில்லாமல் எளிதாக எந்த இடத்திலும் பறக்க விடுகின்றன. இதற்கு வானில் பறப்பதற்கான சிறிதளவான வழிகாட்டு தல்தான் காரணம்.
7. ஒவ்வொரு நாடுகளும் வாங்குவது, பயன்படுத்துவதில் தனித்தனி ஆர்வம் காட்டுகின்றன. 8. சீனா கடற்பகுதிகளை கண்காணிப்பதற்கான அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதனை பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதில் மேலும் தொழில்நுட்பத்தை புகுத்தி பயன்படுத்த தொடங்கியுள்ளன. 9. துருக்கி அதிநவீன டிரோனை பயன்படுத்துகிறது.
துருக்கி பயன்படுத்தும் 'பேராக்டர் டிபி2' என்ற டிரோன், லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அது ஒரு டிரக்கில் பொருத்தும் அளவிற்கு சிறிதானது. 10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சீனா மற்றும் துருக்கியிடம் இருந்து டிரோன்கனை வாங்கி, மோதல் போக்கில் உள்ள ஏமன், லிபியா எல்லையில் ஊடுருவல்களை கண்காணிக்க பயன்படுத்துகிறது. 11. ஆயுதமேந்திய டிரோன்களை கொண்ட நாடுகள், சர்வதேச வழிகாட்டுகளை கடைபிடிக்காமல், தங்களுக்கென வழிகாட்டுதல்களை தயார் செய்து அதை பின்பற்றுகின்றன.
12. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தாக்குதலுக்கு அங்கீகாரம் அளிக்காத வரை அல்லது சொந்த பாதுகாப்பு தவிர்த்து டிரோன் பயன்படுத்துவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது. 13. ஆனால், ஒரு முழுமையான போர் தொடங்குவதற்கு குறுகிய காலத்தில், கண்காணிப்பிற்காக டிரோன்களை பயன்படுத்த முடியும்.
14. டிரோன் பறப்பதற்கான தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை பயன்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
15. கடந்த 20 ஆண்டுகளாக இதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க வல்லுநர்கள் முயற்சி மேற்கொண்டனர். 16. முறையான வழிகாட்டுதல், விதிமுறை இல்லாததால் ஒவ்வொரு நாடுகளும் ராணுவத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என பெரும்பாலான டிரோன் வல்லுநர்கள் கருதுகிறாரள்.
17. டிரோன்கனை வெவ்வேறு ரிமோட் மூலம் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், தேனீக்கள் போன்று ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தாக்கும் அபாயம் உள்ளது. 18. வான்வெளிக்கு வெளியிலும் தாக்குதல் நடத்த முடியும்.
19. போர்க்களத்தில் டிரோன்களை கண்டறிவது மிகவும் கடினமானதாக உள்ளது.
20. உக்ரைன், ரஷிய படைகளுக்குக் கூட சரியாக எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய கடினமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் டிரோன்கள் வேகமாக செல்லும் வாகனங்களாகின்றன. பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்த கட்டுரையை விரைவாக எழுதியுள்ளார்
0 Comments
No Comments Here ..