29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

நாட்டில் இதுவரை நிகழ்ந்த கோர ரெயில் விபத்துகள்:-

* 1981-ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி அன்று, பீகாரில் நிகழ்ந்த மிக மோசமான ரெயில் விபத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. பாலத்தை கடக்கும்போது பாக்மதி ஆற்றில் ரெயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 


* 1995-ம் ஆண்டு ஓகஸ்ட் 20ம் தேதி அன்று, புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. 


அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சுமார் 305 ஆகும். 

*1998-ம் ஆண்டு நொவம்பர் 26ம் தேதி அன்று ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ், பஞ்சாபில் உள்ள கன்னாவில் உள்ள ஃபிராண்டியர் கோல்டன் டெம்பிள் மெயிலின் தடம் புரண்ட மூன்று பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.

 

*1999-ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் தேதி அன்று வடக்கு எல்லை ரயில்வேயின் கதிஹார் பிரிவில் உள்ள கைசல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது பிரம்மபுத்திரா மெயில் மோதியதில் கெய்சல் ரெயில் விபத்து ஏற்பட்டது. இதில் 285க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 


பலியானவர்களில் பலர் ராணுவம், பாதுகாப்பு படையினர் ஆவர். 

*2016ம் ஆண்டு நொவம்பர் 20ம் தேதி அன்று, கான்பூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயனில் இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 152 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயமடைந்தனர்.


 *2010ம் ஆண்டு மே 28ம் தேதி அன்று, ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. மும்பை நோக்கிச் செல்லும் ரெயில் ஜார்கிராம் அருகே தடம் புரண்டது. அப்போது எதிரே வந்த சரக்கு ரெயிலில் மோதி 148 பயணிகள் உயிரிழந்தனர். 


*2002ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அன்று ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்சில் தாவே ஆற்றின் பாலத்தின் மீது தடம் புரண்டதில் ரபிகஞ்ச் ரெயில் விபத்துக்குள்ளானாது. இதில், 140-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 


இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத நாசவேலையே காரணம் என கூறப்படுகிறது. 

*1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரெயில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 126 பேர் உயிரிழந்தனர்.




நாட்டில் இதுவரை நிகழ்ந்த கோர ரெயில் விபத்துகள்:-

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு