02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

இந்திய ரெயில்வே வரலாற்றிலேயே மிக கொடூரமான ஒடிஷா ரெயில் விபத்து

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இதுவரை 233க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன.

30 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 700 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 3 ரெயில்கள் விபத்து என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்திய ரெயில்வே வரலாற்றிலேயே ஒடிஷா ரெயில் விபத்து மிக கொடூரமான விபத்தாக கருதப்படுகிறது..

ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்கு நூறாக நொறுங்கின. எங்கேயும் கைகால்கள் இல்லாத சிதைந்த உடல்கள் சிதறிக்கிடந்தன. ரெயில் தண்டவாளங்கள் எங்கும் ரத்தக்களமாக காட்சியளித்தன. இது என்னால் மறக்க முடியாத ஒரு காட்சி. என அதில் பயணம் செய்த நபர் ஒருவர் கூறியுள்ளார்.

 




இந்திய ரெயில்வே வரலாற்றிலேயே மிக கொடூரமான ஒடிஷா ரெயில் விபத்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு