29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

நோய்கள் தீரவும், ஆயுள் அதிகரிக்கவும் தன்வந்திரி வழிபாடு

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து ஏராளமான பொருட்கள் வெளிப்பட்டன. தேவர்கள், தேவ கன்னிகைகள் கூட தோன்றினர். அப்படி தோன்றியவர்களின் ஒருவர்தான் தன்வந்திரி பகவான். 


இவர்தான் திருப்பாற்கடலில் இருந்து அமிர்தக் கலசத்துடன் வெளிப்பட்டவர். இவர் கையில் மூலிகையும் வைத்திருப்பார். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான், தன்னுடைய கரங்களில் சங்கு, சக்கரத்தையும் தாங்கியிருப்பார். 


திருவரங்கம் அரங்கநாதர் கோவில், சேலம் கந்தாஸ்ரமம், கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம், கேரளாவில் உள்ள நெல்லு வாய் ஆகிய இடங்களில் தன்வந்திரி பகவானுக்கு ஆலயங்கள் உள்ளன. 


இதில் நெல்லுவாயில் உள்ள ஆலயத்தில் தன்வந்திரி பகவானின் கைகளில் சங்கு, சக்கரம், மூலிகை, அமிர்தக்கலசத்துடன் மாமரப் பூவையும் வைத்திருக்கிறார். நோய்கள் தீரவும், ஆயுள் அதிகரிக்கவும் பக்தர்கள் இவரை வணங்குகின்றனர்.





நோய்கள் தீரவும், ஆயுள் அதிகரிக்கவும் தன்வந்திரி வழிபாடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு