08,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

தமிழர்களின் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படும்- சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன்

தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோய்க்கொண்டிருக்கிற சூழலில் அவற்றை பாதுகாக்கவேண்டியது அவசியம். தவறினால், வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இப்படி கூறினார். 


அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைக்கப்பட்டதைப் போன்று ஏனைய வரலாற்று மரபுரிமைச் சின்னங்களும் புனரமைக்கப்பட்டு, அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, இங்குள்ள மந்திரி மனையை அடையாளப்படுத்தி காப்பாற்றுவது போன்று ஏனைய வரலாற்று அடையாளச் சின்னங்களையும் அடையாளப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் ‍ஒவ்வொன்றாக பறிபோய்க்கொண்டிருக்கின்றன. எனவே, வரலாற்று அடையாளங்களை நாம் சரியாக நிறுவாவிட்டால், அதை புனைந்து அழிக்க நெருங்கிவிடுவார்கள்.


வ்வாறு எமது பாரம்பரிய வரலாற்று அடையாள சின்னங்களை பாதுகாக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


எங்களது அடையாளச் சின்னங்கள் எங்கிருந்தாலும், கல்வெட்டுக்களை அமையுங்கள் அதைவிடுத்து எதுவும் இல்லாமல் அது இது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

மேலும், எங்களது பாரம்பரிய அடையாளங்களை குறிப்பிட்டுச் சொல்வதற்கு எம்மவர்களிடத்தில் பொறுமை இல்லை. அந்த பொறுமையை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.





தமிழர்களின் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படும்- சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு