21,Nov 2024 (Thu)
  
CH
பொழுதுபோக்கு

இந்த படத்தில் முதலில் உங்கள் கண்ணில் தெரிவது யானையா? தீக்கோழியா? கண்டுபிடியுங்கள் உங்கள் ஆளுமையை தெரிந்துகொள்ளுங்கள்(படம் உள்ளே)

ஒருவரின் குணத்தைப் பற்றி எளிதில் தெரிந்துகொள்ள வேண்டுமா? அல்லது உங்களுடைய ஆளுமைத் திறன் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயத்தை கூற வேண்டுமா? இருக்கவே இருக்கிறது ஒளியியல் மாயை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை நன்றாக பாருங்கள். ஒளியியல் மாயையான இதில், நீங்கள் முதலில் எந்த விலங்கை பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, நீங்கள் எப்படிபட்டவர், உங்கள் குணம் என்ன, உங்கள் ஆளுமைதிறன் என்ன? என்பதை கூறிவிடலாம்.


யானை

இந்தப் புகைப்படத்தில் பல பொருட்கள் இருந்தாலும் உங்கள் பார்வைக்கு முதலில் யானை தெரிந்தால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் எதையும் தர்க்க ரீதியாக யோசித்து முடிவெடுக்க கூடியவர். உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு எதிலும் விரைவாக முடிவெடுக்க மாட்டீர்கள். அதேப்போல் நீங்கள் எப்போதும் தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். அமைதியானவராகவும், எல்லாருக்கும் ஆதரவாகவும் தேவைப்படும் நேரத்தில் மற்றவர்களுக்கு உதவக்கூடியவராகவும் இருப்பீர்கள். மேலும் இவர்கள் நம்பகமானவர்களாக இருப்பதோடு சிறந்த தொடர்புத் திறனும் கொண்டிருப்பதால், ஒரு நல்ல தலைவனுக்கான அத்தனை தகுதிகளையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

சிங்கம்


உங்கள் கண்களுக்கு முதலில் சிங்கம் தெரிந்தால், நீங்கள் எந்த முடிவுகளையும் உங்கள் உள்ளுணர்வு மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எடுப்பீர்கள். ஆர அமர உட்கார்ந்து யோசிக்கும் பழக்கம் எல்லாம் உங்களுக்கு கிடையாது. எப்போதும் ஆற்றல்மிக்கவர்களாக இருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் தைரியசாலியாகவும் வலிமையானவராகவும் இருப்பீர்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சிறு விஷயங்களுக்கு எல்லாம் கவனம் கொடுக்கமாட்டீர்கள். அதற்குப் பதிலாக அதன் முழு விவரமும் தெரிந்துகொள்ள முற்படுவீர்கள். எனினும் இவர்கள் நம்பகமானவர்களாக இருப்பதோடு, பகுத்தறிவான கருத்துகளால் எளிதில் பிரச்சனைகளை தீர்ப்பார்கள்.


தீக்கோழி (ஒஸ்ட்ரிச்)

இந்தப் புகைப்படத்தில் முதலில் தீக்கோழியை பார்த்தீர்கள் என்றால், உங்கள் ஆளுமை எப்படிபட்டதாக இருக்கும்? எதையும் அதிகம் யோசிக்காமல், உங்கள் உணர்வுகளுக்கும் உள்ளுணர்வுக்கும் மதிப்பளிப்பீர்கள். மன உறுதி மிக்கவராகவும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாகவும் இருப்பீர்கள். எப்போதும் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் நேரத்தைச் செலவழிப்பீர்கள். பிரச்சனையான சூழலில் கூட அமைதியாக இருப்பீர்கள். பகுத்தறிவுக்கு பதில் உள்ளுணர்வை நம்பும் நீங்கள், குழுவாக இயங்கும் போதும் சரி, தனியாளாக இருக்கும் போதும் சரி, கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள்.


பறக்கும் பறவைகள்


இந்தப் புகைப்படத்தில் மரத்திற்கு மேல் பறக்கும் பறவைகள் உங்கள் பார்வைக்கு முதலில் தெரிந்தால், நீங்கள் எப்போதும் தர்க்கரீதியாக யோசித்து, உணர்வுகளை விட சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என நினைப்பீர்கள். சுயமாக இருப்பதை விரும்புவீர்கள். தேவையான சமயத்தில் நீங்கள் விரைவாக முடிவெடுத்தாலும், எந்தவொரு செயலை செய்வதற்கு முன்னும் நன்றாக யோசித்த பிறகே களமிறங்குவீர்கள். சில சமயங்களில் எதைப்பற்றியும் கவலைப்படாதவராக நீங்கள் காண்பித்துக் கொண்டாலும், வானத்தில் பறக்கும் பறவை போல் எதையும் முழுமையாக தெரிந்துகொள்ள விரும்புவீர்கள்.





இந்த படத்தில் முதலில் உங்கள் கண்ணில் தெரிவது யானையா? தீக்கோழியா? கண்டுபிடியுங்கள் உங்கள் ஆளுமையை தெரிந்துகொள்ளுங்கள்(படம் உள்ளே)

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு