உலகின் கடைசி நகரம் என அழைக்கப்படும் உஷுவாயா, பனி சூழ்ந்த அண்டார்டிகா கண்டத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அர்ஜென்டினாவின் தியெரா டெல் பியூகோ மாகாணத்தின் தலைநகரான இந்த நகரம், அதன் தனித்துவமான இருப்பிடத்தால் பல சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
அண்டார்டிகாவிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உஷுவாயா, தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு விளிம்பில் உள்ளது. இந்த நகரத்துடன் தான் தென் அமெரிக்க கண்டம் முடிவடைகிறது. கடலையொட்டி அமைந்துள்ள இந்த நகரம் மற்ற பகுதிகளில் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 83 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
ஸ்பானிஷ் இங்கு அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் ஆங்கிலமும் பரவலாகப் பேசப்படுகிறது.
உஷுவாயா ஒரு தேசிய பூங்காக்களைக் கொண்ட அழகான நகரமாக விளங்குகிறது. இது ஒரு முக்கியமான துறைமுக நகரமாகவும் செயல்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான கப்பல்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றன.
அறிவியலாளர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் உஷுவாயா ஒரு முக்கிய நுழைவாயிலாக உள்ளது. அதன் புவியியல் தனித்துவமே "உலகின் கடைசி நகரம்" என்ற பெயரைப் பெற்றுத்தந்துள்ளது.













0 Comments
No Comments Here ..